பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2013


“ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது” மேர்வின் சொன்னார்

தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன்,
ஆனால் ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன். கொலை செய்யப்பட்ட விதத்தை பார்க்கும் போது தெரிகிறதுதானே யார் கொலை செய்திருப்பார்கள் என்று.களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையானது தன்னை சிக்கவைக்க ராஜபக்ஷவினர் மேற்கொண்ட கொலை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், ராஜபக்ஷவினர் செய்த அனைத்தையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மரண வீட்டுக்கு வந்து சென்ற மறுநாளே, கொலையாளிகள் என ஒவ்வொருவரை கைதுசெய்து வருகின்றனர். கைதுப்பாக்கிகள் மீட்கப்படுகின்றன. இவை அனைத்தும் என்னை தாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டவை என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
ராஜபக்ஷவினர் ஒரு கல்லில் இரண்டு மூன்று மாங்காய்களை அடிக்க முயற்சிக்கின்றனர்.  நான் அனைத்தையும் வெளியிடப் போகிறேன் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.