பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2013


தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை
 டாக்டரிடம் கூறி அழுத மாணவி
 பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

’’நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான்.

அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன்’’என்று அவர் டாக்டரிடம் கூறியதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கஸ்தூரி தெரிவித்தார்.

 மேலும் டாக்டர் கஸ்தூரி கூறும்போது "மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். அவருக்கு உடலில் வேறெங்கும் காயம் இல்லை என்றார்".