பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2013


கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை  நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளார்.
அங்கு  அவருக்கு இரண்டு கண்களிலும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது குணமடைந்துள்ள அவர், நாளை இலங்கைக்குத் திரும்பவுள்ளதாகவும், வரும் வெள்ளிக்கிழமை திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வாசிங்டனுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், இரா.சம்பந்தன் கொழும்பு திரும்பியதும், அந்தப் பயணத்துக்கான ஒழுங்குகள் தீர்மானிக்கப்படும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.