பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2013



இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பீட்டர் மொஹான் பீரிஸ் இன்று பகல் 12.37க்கு சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.

புதிய பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மொஹான் பீரிஸ், தனது கடமைகளை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.