பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2013


மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப்
பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
ரிஸானாவின் தாயாரை தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மகளின் செய்தியை அறிந்து கொள்ளும் வரை மகள் வீடு வந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகி விட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார்.
இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று விடுதலையாகி தனது வீட்டிலிருந்து ஒருமைல் தூரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ரிஸானாவின் தந்தை நபீக்கிடம் இத்துயரச் செய்தி வியாழக்கிழமையே சொல்லப்பட்டது தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்
.