பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013


ரிசானாவிற்கு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது! இல.பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கைப் பணிப் பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைப் பணிப் பெண் ரிசானா நாபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் இன்று மரண தண்டனை உத்தரவினை நிறைவேற்றியுள்ளது.
வீட்டுப் பணி;ப் பெண்ணாக சவூதி அரேபியா சென்ற ரிசானா கடந்த 2005ம் ஆண்டு நான்கு மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து வீட்டு எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 2007ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்த மரண தண்டனையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு இராஜதந்திர ரீதியில் அரசாங்கமும், ஏனைய வழிகளில் மனித உரிமை அமைப்புக்களும் முயற்சி செய்திருந்தன.
எனினும், ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சு இன்று உத்தரவிட்டுள்ளது.
ரிசானாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கைப் பாராளுமன்றத்தில் ரிசானா நபீக்கிற்கு ஒருநிமிடம் மௌன அஞ்சலி
சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கிற்கு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் இரங்கல் தெரிவித்து ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.