பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2013


யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.