பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியில் 4340 குடியிருப்பு

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் படை குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த படைக்குடியிருப்பு மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளதால், அந்தக் கட்டிடத்தை ஸீ2 கோடியே 59 லட்சம்  மதிப்பீட்டில் 500 காவலர்கள் தங்குவதற்கு வசதியாக, 2 மாடி கொண்ட கட்டிடமாக 1,593 சதுர மீட்டர் பரப்பளவில் புனரமைத்து கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஆயுதப்படை வளாகங்கள், சிறப்பு காவல் படை வளாகங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளிகள் போன்ற 37 இடங்களில் வகுப்பறைகளை புதுப்பித்தல், குடிநீர் மற்றும் கட்டமைப்பு வசதிகளை சீர்செய்தல், கவாத்து மைதானங்களை சீரமைத்தல், சமையல் மற்றும் உணவு கூடங்கள், பயிற்சியாளர் தங்குமிடங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக கட்ட மொத்தம் ரூ.14.95 கோடி அனுமதித்தும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.