பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் குறித்து விசேட அறிக்கை!

இந்த இளைஞன் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக தூதுவராலயத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.கட்டாரில்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய இளைஞன் ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தமையினால் அவருக்கு இந்த மரண தணடனை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடாசலம் சுதேஷ்கர் என்கின்ற 22 வயதான இளைஞனுக்கே இவ்வாறு  இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த இளைஞனை காப்பாற்ற வேண்டுமாயின் உயிரிழந்த இந்திய பிரஜையின் பெற்றோருக்கு 35 இலட்சம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அந்த தொகையை செலுத்துவதற்கான இயலுமை தன்னிடம் இல்லை என வெங்கடாசலம் சுதேஷ்கர் தெரிவித்துள்ளார்.