பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2013


மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் பங்கேற்ற  தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சாட்சியாளர்களாக புலி ஆதரவு அமைப்புக்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.