பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2013

இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


இலங்கைப் போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில் தீவிர மடைந்துள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷ பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.