பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013



பிரித்தானியக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கடந்த 10ம் திகதி கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்த குறித்த நபர், தனது மனைவி மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் லண்டனுக்குச் செல்வதற்காக கொழும்பு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 10ம் திகதியிலிருந்து அவரது தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து அவர் காணாமல் போய்விட்டார் என்று யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.