பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013

இலங்கைத் தமிழர்களால் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட தமிழ் ஆர்வலர் டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், அண்ணாவின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.