பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2013


ஜெனீவா ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைப்பு
ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 209 யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு முன்வைக்கப்படவுள்ள 209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பது என இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நிராகரிக்கப்படவுள்ள விடயங்களில் யுத்தக் குற்றம், சர்வதேச நீதிமன்ற விசாரணை, பாதுகாப்புத் தரப்பு ஆகியவையும் உள்ளடங்குவதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன.
ஏனைய 111 யோசனைகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடுகளில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்படவுள்ளன.
மேலும், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 1200 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.