பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2013

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.