பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013


பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைப்பு
பாடசாலை மாணவி ஒருவருடன் சினிமாவுக்கு சென்ற பிக்கு ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் பேமா சுவர்னாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாரம்மலை பிரதேசத்தைச் சேர்ந்த பெளத்த துறவிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசியூடாக காதல் தொடர்பை வளர்த்து க்கொண்டுள்ள குறித்த பிக்கு, நண்பர்கள் இருவரின் உதவியுடன் குறித்த பாடசாலை மாணவியுடன் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
சம்பவதினம் குறித்த பிக்குவுக்கு மாற்று உடை வழங்கியதாகக் கூறப்படும் இருவரையும் வெலிவேரிய பொலிசார் கைது செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
துறவற உடையை களைந்து, சாதாரண உடையுடனே பிக்கு, படம் பார்க்கச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரான பிக்குவின் கை பையிலிருந்து  பிக்குகள் அணியும் உடை, அதனோடு தொர்புடைய சில பொருட்களும் மீட்கப்பட்டதாக  பொலிசார் மேலும் தெரிவித்தனர்.