பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013




மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் மேலதிக பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் இந்தியா அல்லது பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாத்தளை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன தெரிவித்தார்.

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித எலும்புக் கூடுகள் அகற்றும் நடவடிக்கை கடந்த நவமபர் மாதம் 26ஆம் திகதி முதல் 2013 பெப்ரவரி 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 154 மனித எலும்புக் கூடுகளும் 141 மனித மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.