ஒற்றைப் புலி சினைப்பர் தாக்குதல் 50 அதிரடிப்படை காயம் - vidfeo
2009ம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமடைந்தவேளையில், சாலை என்னும் இடத்தை இராணுவத்தினர் கைப்பற்ற பெரும்பாடுபட்டனர். பல நாட்களாக இப் பகுதியை தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் புலிகள். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் அளவில், இப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இராணுவத்திற்கு என்ன நடந்தது என்பதனை நீங்கள் இந்தக் காணொளி மூலம் காணலாம். விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரனில்
தனித்து நின்ற சினைப்பர்(குறி சுடும் நபர்) சளைக்காமல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அவர் ஒருவர் மட்டுமே சிறிய காவல் அரன் ஒன்றில் இருந்துகொண்டு, முன்னேறும் இராணுவத்தை நோக்கிச் சுட்டுள்ளார். தாம் எங்கிருந்து தாக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு முன்னதாகவே , சுமார் 50 அதிரடிப்படையின் , ஒற்றைப் புலி உறுப்பினரின் சினைப்பர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இவர்களின் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை. சாலையைப் பிடிக்கச் சென்ற இலங்கை இராணுவத்தின் அதிரடிப் படைப் பிரிவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த ஒற்றைப் புலி உறுப்பினர் யார் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இராணுவ முன்னேற்றத்தை கணிசமான அளவு தாமதப்படுத்தியும் சேதப்படுத்தியும் உள்ளார். இக் காணொளி சிங்கள ஊடகவியலாளரால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அன்றைய தினம் மட்டும் சுமார் 50 அதிரடிப் படையினர் தாக்குதலுக்கு இலக்காகினார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.