பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2013


இழந்த பதவியை மீளப்பெற மேர்வினுக்கு உதவுவாரா விஷ்ணு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி முன்னாள் அமைப்பாளரான மேர்வின் சில்வா இழந்த பதவியை மீண்டும் பெறும் நோக்கில் உத்பலவர்ண விஸ்ணு தேவாலயத்தில் இன்று விசேட பிராத்தனையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது 59 பிக்குகள் பிரித் ஓதி மேர்வினுக்கு ஆசி வேண்டியுள்ளதுடன் 108 தடவை செத் கவி பாராயணமும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இடம்பெற்ற விசேட பூஜைகளில் பல இடங்களிருந்தும் வந்த மக்கள்  கலந்துகொண்டுள்ளனர்.
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலையின் பின்னர் மேர்வின் சில்வாமீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.