பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2013

கிருஷ்ணசாகர் அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மைசூரிலிருந்து பெங்களூருக்கு கடந்த 7-ந்தேதி எடியூரப்பா நடைபயணம் தொடங்கினார். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்
என்று 

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.





இந்தநிலையில் இன்று கிருஷ்ணசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட ஷெட்டர் உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த எடியூரப்பா தனது பயண திட்டத்தை மாற்றி ஆதரவாளர்களுடன் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது நடைபயண திட்டத்தை கிருஷ்ணசாகர் அணை அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்திற்கு மாற்றினார்.

அங்கு சென்று அணையை முற்றுகையிட முயன்றார். ஏற்கனவே, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே போராட்டத்தில் இறங்கிய எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.