பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2013

மொபைல், இணையம், கேபிள் சேவைகள் காஷ்மீரில் துண்டிப்பு  காஷ்மீமாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமத் பயங்கரவாத அமைப்பு உறுப்பினருமான அப்சல் குரு இன்று காலையில் தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், பதற்றம் எழு
ம் வாய்ப்பு உள்ளதால், மொபைல் போன் சேவை, இணையதள சேவை, கேபிள் டிவி நெட்வொர்க் முதலியவை உடனடியாக நிறுத்தப்பட்டன.

அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட செய்தி தெரிந்தவுடன், மா
வட்டத்தின் தலைநகர்களில் இருந்து போலீஸார் உடனடியாக பாதுகாப்புப் பணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப் பட்டனர். பாரமு
    ல்லா, அனந்த்நாக், புல்வாமா, பட்காம், குப்வாரா, காண்டெர்பால், வடக்கு காஷ்மீரின் சொபோர் நகர் உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர் முழு அளவிலான பாதுகாப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், உள்ளூர் கேபிள் ஒளிபரப்பும் நிறுத்தப் பட வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு கட்டளை இடப்பட்டது.