பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2013


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு திடீர் விஜயம்

 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுரு சிங்ஹவும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜனுடன் அவர் உரையாடியுள்ளார்.
http://www.virakesari.lk/image_article/agfeh%20nd.jpg
பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் அங்கு கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது Z புள்ளி அடிப்படையில் சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பாசுகாப்புச் செயலாளர், அவர்களுக்கு ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவ பீட அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர், அவுஸ்ரேலிய குடியிருமை பெற்ற புலம்பெயர்ந்தவர் உட்பட பலர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்துள்ளனர்.