| பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்ததைப் போன்று அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்யவேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |