பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013

வைகோ பேச்சு :-
நான் அதிக வேண்டுகோள்களை முதலமைச்சருக்கு வைப்பதில்லை . வாழ போகும் இந்த காலத்தில் தன்மானத்துடன் வாழ விரும்புகிறேன் .
 நான் மூவர் தூக்கு தண்டனைக்காக , அவர்களை காப்பாற்ற கோரி முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தேன் . அதன் பிறகு நான் வைக்கும் வேண்டுகோள் விவசாயி நலன் காக்க , அவன் வாழ்வாதாரங்களை காக்க கெயில் நிறுவனத்தின் பணியை உடனே நிறுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன் . அவன் தான் நமக்கு சோறு போடுபவன் . அவன் நிலங்களை நீ கையகபடுத்த முயன்றால் இந்த புண்ணிய பூமியை ஆளும் தகுதி உனக்கில்லை என்று அர்த்தம் . கட்சி கொடிகளை தூக்கி எறிந்துவிட்டு விவசாயிகளுடன் போராடுவேன் . இதில் அரசியல் கலக்கமாட்டேன் . விவசாயிகளுக்கு தோள்கொடுக்கும் எங்களை நீ வேற்றார் என்றால் , அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்கு போராடி பொலிவிய காடுகளில் அலைந்த சேகுவேரா என்ன வேற்றாரா ? உலகம் பறந்து விரிந்தது . உலகம் தெரியதாவர்கள் உளறட்டும் . இந்த புண்ணிய பூமியில் விவசாயி எங்கு அல்லல் பட்டாலும் வைகோ அங்கு நிற்பான் .