பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2013



மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா சாம்பியன்
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. ஹெய்ன்ஸ் 52, கேமரூன் 75 ரன்கள் எடுத்தனர். மற்ற வீ
ராங்கனைகள் ஓரளவு சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குவின்டைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. 145 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.