பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2013


ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!
இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
,
இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா, ஜரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்திய அரசு மவுனமாக உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்றுபட்டு இங்குள்ள எம்.பி.கள்., எம்.எல்.ஏ.கள், ஒன்றுபட்டு டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும். 
அடுத்த மாதம் 22-ந் தேதி ஜெனீவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. இதில் நான் கலந்து கொள்கின்றேன். இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும். 

இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைக்க வேண்டும். 6 நாடுகளில் போர் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1 1/2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.