பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2013


இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி மாநாடு! டி. ராஜா ஜெனிவா பயணம்!
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் மார்ச் 2, 3 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்
டி. ராஜா, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வியாழக்கிழமை (பிப். 28) ஜெனிவா செல்கின்றனர்.
பிரபாகரனின் 12 வயது மகன் இலங்கை ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டது, இனப்படுகொலையைக் கண்டித்து இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள சிங்கள ராணுவ வீரர்கள், டாக்டர்கள், எழுத்தாளர்களை கொலை செய்யும் இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. ராஜா, தா. பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.