பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013


யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
96ஆவது தடவையாக நடைபெற்ற இப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தப் போட்டி இம்முறை வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக புனித பத்திரிசியார் கல்லூரியின் ரிஷாந்தன் டியூடர் தெரிவானார்.

சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை புனித பத்திரிசியார் அணியின் கிளின்டனும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை ரி.நிமலேந்திராவும் வென்றெடுத்தனர்.

சிறந்த களத்தடுப்பாளர் மற்றும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரருக்கான விருதுகளை யாழ்ப்பாணக் கல்லூரியின் பி.அபிராஜ் கைப்பற்றினார்.