பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013


ஆஸி.க்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில்


சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்
இழப்புக்கு 515 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்கஸில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்சகல விக்கெட்டுக்களையும் இழந்து 380 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக ஆஸி. அணியின் தலைவர் கிளார்க் 130 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் அசத்திய அஸ்வின் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பம் சறுக்கினாலும் நடுவரிசையில் களமிறங்கிய சச்சின் (81)இ கோலி (107) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி சிறந்த இலக்கினை அடைந்தது. 

இந்நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் தலைவர் தோனி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இது தோனி பெறும் முதலாவது இரட்டைச் சதமாகும். இதனால் இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களினால் முன்னிலை வகிக்கின்றது. 
ஆஸி. அணி சார்பாக பெட்டின்சன் 4 விக்கெட்டுக்களையும் லையொன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தோனி(206) மற்றும் புவனேஸ் குமார் (16) ஆகியோர்ஆட்டமிழக்காது ஆடுகளத்திலுள்ளனர். நாளை போட்டியின் 4ஆவது நாளாகும்.