பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2013


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏழு நாடுகள் சதித் திட்டம்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏழு நாடுகள் சதித் திட்டங்களை தீட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டியூனிசியா, உருகுவே, ஈக்வடோர், கொஸ்டரிக்கா, லெட்வியா, ஸ்லோவக்கியா மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளே இவ்வாறு இலங்கைக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் ஐந்து நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவை.
சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.