பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2013


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு நிறைவேற்றுப்படுமா ?
இந்தியாவின் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டால் விரைவில் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
20 வருடங்களுக்கு மேலாக முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.