பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2013


தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்!
 

தேமுதிக எம்எல்ஏக்களான மைக்கேல் ராயப்பன், தமிழழகன், அருண்பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர். பின்னர் அவர்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகவும்,
தேமுதிக தலைமையிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வருகின்றனர். 
தற்போது 4வது எம்எல்ஏவாக செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. டி.சுரேஷ்குமார் தலைமைசெயலகத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
டி.சுரேஷ்குமாரும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவும், தேமுதிக தலைமைக்கு எதிராகவும்இருப்பார் என்றும் கூறப்படுகிறது.