அமெரிக்க அரச்சனது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது Procedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப்
பாவித்து இப் பிரேரணையை ரத்துச் செய்ய முடியாது. இவ்வாறானதொரு பிரேரணையை , அமெரிக்க மார்ச் மாதம் கொண்டுவரவுள்ளதாக, அமெரிக்காவில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது.
இவ்வகையான பிரேரணைகள், முன்னைய நாட்களில் எடுக்கப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகளுக்கும் தற்போது விடைகிடைத்துள்ளது எனலாம். முன்னைய நாட்களில் இவ்வாறானதொரு பிரேரணையை சில நாடுகள் முன்மொழிந்து நிறைவேற்றியும் உள்ளது. இதுபோன்ற பிரேரணையை ஒரு நாடு கொண்டுவரும்போது அதனை வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள், தடுக்க முடியாத நிலை தோன்றும். எனவே வரவுள்ள தீர்மாணத்தில் இலங்கைக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இலங்கை தவறவிடும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா எடுக்கும். அப்போது , சீனா இல்லையேல் ரஷ்யா போன்ற நாடுகள் நினைத்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது. இதுவே தற்போதைய நிலையாக உள்ளது எனலாம்.