பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013


மஹிந்தவின் உருவ பொம்மையை துடைப்புக்கட்டையால் அடித்து தூக்கிலிட்டு இலங்கைக் கொடியோடு எரித்தனர் இடிந்தகரை மக்கள்
மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வந்ததைக் கண்டித்து இன்று இடிந்தகரையில் அணு உலை போராளிகள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இப்படி செய்ய முடியாதபடி காவல்துறை நெருக்கடி இருக்கும். ஆனால் இடிந்தகரையில் ஊர் மக்களின் எதிர்ப்பால் காவல்துறை அடுக்குமுறை கிடையாது.
அதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி ராஜபக்‌ஷவின் உருவ பொம்மையைத் துடைப்பத்தால் அடித்தும், செருப்பால் அடித்தும் பின்னர் ஊர்வலமாக சென்று கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தூக்கு மேடையில் ராஜபக்சேவின் உருவபொம்மையை தூக்கிலிட்டனர்.
அதோடு நின்று விடாமல் உருவ பொம்மையை எரித்தும், சிங்கள கொடியை எரித்தும் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இப்படியானதொரு எதிர்ப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.