பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013


பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் புத்தகாயாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த
இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்த கயாவை சென்றடைந்துள்ளார்
இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலத்தின் புத்த காயாவை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
மாநில பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.