பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013


தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.


இந்நிலையில், இன்று அவர், கண்ணன்குடியில் இருந்து தேவகோட்டைக்கு அவருடைய காரில் வந்தார். பருத்திக் கொடி என்ற ஊருக்கு அருகே வந்தபோது, எதிரில் ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த படைவென்றானை சிகிச்சைக்காக தேவகோட்டை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். பின்னர் அவரது உடல் தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு