பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013


வாகனம் தடம்புரண்டதில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் காயம்: கிளிநொச்சியில் சம்பவம்
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரினின் வாகனம் ஏ - 9 வீதியில் தடம்புரண்டதில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 6.30 மணியளவில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்துக்கும் இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் மற்றும் அவருடைய பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது