பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013


இலங்கை சுதந்திர தினத்துக்கு வாளேந்திய சிங்கத்துடன் கூகிள் பக்கம்
பல உலக சார் நிகழ்வுகளுக்கு டுடில்ஸ் செய்து வரும் பிரபல தேடல் தளமான கூகிள், இன்று இலங்கை சுதந்திர தினத்துக்கும் வாளேந்திய சிங்கத்துடன் கூடிய கூகிள் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று இலங்கையின் சுதந்திர தினம் என்றும் இல்லாதது போல் இன்று கூகிள் இணையத்தில் அதாவது சிறிலங்காவுக்கான கூகிள் பக்கத்தில் www.google.lk இல் சிங்கத்தினுடைய படம் வருகின்றது.
இதை புத்திக நுவான்(Buddhika Nuwan) என்பவர் தமது நாட்டுக்காக பரிந்துரை செய்துள்ளார்.
இதை கூகிள் நிறுவனம் ஏற்று இதுபோல் ஒரு டுடில்ஸ் (doodles) வடிவமைத்து வெளியிட்டுள்ளது இதை நீங்கள் www.google.lk எனும் தளத்தில் பார்வையிடலாம். இது போல் கூகிள் பல உலக சார் நிகழ்வுகளிற்கு டுடில்ஸ் செய்து வருகின்றது, (http://www.google.com/doodles/finder/2013/All%20doodles)
இதுபோன்று கணணி நிபுணர்களாக இருக்கும் தமிழர்கள் ஏன் இப்படி சில சிறிய சிறிய வேலைகளை செய்யக்கூடாது?, தமிழீழ முக்கிய தினங்களான, கரும்புலிகள் தினம், மாவீரர் தினம் போன்ற பலவற்றை கூகிளிற்கு பரிந்துரை செய்ய முடியும், இதை ஒருவர் மட்டும் செய்ய இயலாது, எல்லோர் முயற்சியில் தான் இது சாத்தியமாகும், ஆகவே இன்றிலிருந்து வேலையை ஆரப்பிப்போம், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது "proposals@google.com" எனும் முகவரிக்கு உங்கள் பரிந்துரைகளை அனுப்புங்கள் என்று ஒரு தமிழ் மகனின் ஆதங்கமாகும்.
அதற்கு முன்னர் (http://productforums.google.com/forum/#!msg/websearch/JJBVXb7XLDQ/r7U3N5OpQekJ) இவ் இணையத்தில் உங்களது Discussion ஒன்றை ஆரப்பித்து உங்களால் முடிந்த ஆட்களை உங்களுக்கு ஆதரவாக திரட்டுங்கள் என ஒரு தமிழ் உணர்வாளர் அக்கறைகொண்டுள்ளார்.