பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2013



ஆரத்தழுவி அரவணைத்த அன்னை
ஆறாத் துயரில் அழுந்திடவே 
நீரால் இழுத்துன்னை கடலன்னை
நீறாய் மாறிடச் செய்தாளே




பாரில் முந்திட உன் தந்தை
பாரிஸ் தனிமையில் தனை உருக்கி
வேராய் உன்னை உருவாக்க
நீறாய்ப் போனது என்(ன) கொடுமை?

ஆறாய்க் கண்ணீர் கரைபுரள
அருமை அண்ணன்மார் துடிக்க
ஒரு தாய் வயிற்றின் மார் வெடிக்க
நீறாய்ப் போனது நியாயமன்று

சீராய் வளர்ந்தாய் சிறப்பாக
ஊரார் கண்கள் உனை மொய்க்க
நேராய்ப் போன உன் தடம் மாறி
நீறாய்ப் போனது நிஜம்தானா?

போனது போனாய் பலபேர் துயருற
போனது மோட்சம் ஆகிடட்டும்
வீணது உயிரின் அவசரப்பயணம்
விண்ணிலே சாந்தி கொண்டிடட்டும்.

தவம் அண்ணன் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயப் பங்கு மக்களின் இளைஞர் ஒன்றியம் - பிரான்ஸ்