பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2013


குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மரணம்! ஊர்காவற்றுறையில் சம்பவம


ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள வேனிக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்றுக் நண்பகல்12 மணியளவில் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிரோஜன் (வயது 18) என்பவரே உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்றுக் குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இந்தக் குளத்தில் குளிப்பதற்காக காலை 11 மணியளவில் சென்றுள்ளார். அங்கு குளித்துக்கொண்டிருக்கும் போது குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று இளைஞர் தவறுதலாக அங்கிருந்த ஒரு பள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டுள்ளார்.
இவருடன் இணைந்து குளிக்சச் சென்ற நண்பர்கள் அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அது கைகூடவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியினருடைய உதவியுடன் குளத்தில் சுழி ஓடிகள் வரவழைக்கப்பட்டு தேடியதில் இளைஞர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பகுதி பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தினைப் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.