பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2013



அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்நாற்காவீச்சு
உசிலம்பட்டியில் ந‌டைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விரைவில் கொண்டாட இருப்பதையொட்டி, உசிலம்பட்டி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், மதுரை மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
 நடைபெற்றது. 
கட்சி நிர்வாகிகள் அனைவரும் பேச வேண்டுமென்று மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்திடம் அனுமதி கோரினர். ஆனால், இதற்கு முத்துராமலிங்கம் அனுமதி மறுக்கவே, கட்சி நிர்வாகிகள் நாற்காலி வீசி தகராறில் ஈடுபட்டனர். இதில் சேடபட்டி எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கனிபாலன் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.