பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013



திருப்பதியில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு

திருப்பதி வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜபக்சே 3-வது முறையாக வருகிற 8-ந்தேதி திருப்பதி வருகிறார்.

      
ராஜபக்சே வருகைக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 8-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் திருப்பதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் திருமலை வந்து தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சே தரிசன நேரம், மற்றும் பாதுகாப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் வேலூர், திருவள்ளுவர் மாவட்ட எல்லைகளில் தமிழக போலீசார் குவிக்கப்படுகின்றனர். வாகனங்களில் செல்லும் போராட்ட குழுவினரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பதியில் முன் கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றன