பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013


இந்திய கோடீஸ்வரர் கட்டுநாயக்காவில் கைது!
இந்திய கோடீஸ்வரர் ஒருவர் அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை நாணயங்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் டுபாய் நோக்கி பயணமாகவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 28ஆயிரம் அமெரிக்க டொலர்களும் 35 லட்சம் ருபாய் இலங்கைப் பணமும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தப் பணத்தை சீட்டாட்டத்தின் மூலமாக பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ஒரு லட்சம் ரூபாவை தண்டப்பணமாக அறவிட்டதன் பின்னர் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.