பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013


பெண்கள், குழந்தைகளுடன் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாக கரூரில் உள்ள 2 முகாமில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டத்தில ராயனூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. ராயனூரில் முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், இரும்பூதிப்பட்டியில் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உண்ணாவிரத்தில் திரளான பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈழத் தமிழருக்கு தனி ஈழம் பெற்றுத் தர வேண்டும், ஐ.நா சபையில்,  இலங்கைக்கு எதிராக, இந்தியா வலிமையான தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும்.  ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டு்ம்