பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013


கூடங்குளத்தில் கவுன்சிலர் மனைவிக்கு 30 லட்சம் வந்தது எப்படி? :ரகசிய விசாரணை

கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் தவசி. இவர் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

 
இந்நிலையில் இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம், பண பட்டுவாடாவிற்கு தடைவிதித்தது. அம்பிகாவுக்கு வந்தது போல் கூடங்குளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.