பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013


சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் :இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்தது அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும்.  மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்திருந்தது.
இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல் குறித்து சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.