பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013


ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்
உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று (14.03.2013) உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டடும். ஐ.நா. மனித உரிமை கவுன்சி-ல் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. 
செய்தி: சந்திவேல்.