பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013



காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தை
முடிக்கிறார் சசிபெருமாள்! திருமாவளவன் தகவல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் 33வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை 03.03.2013 ஞாயிறு மாலை போலீசார் வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 
அங்கு அவரை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணாவிரத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு சசிபெருமாள், சென்னை காந்தி சிலை அருகே 04.04.2013 திங்கள்கிழமை உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக எழுதிக்காட்டினார் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.