பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


கொழும்பு ஆனந்தா - நாலந்தா கல்லூரிகளுக்கிடையே மோதல்!- காவற்துறை கண்ணீர் புகைவீச்சு

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளான ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய கல்லூரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது

இதனை கட்டுப்படுத்த காவற்துறையினர் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டனர்.
கொழும்பில் நடைபெறுகின்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் இந்த கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியும் அடங்குகிறது.
ஏற்கனவே இந்த போட்டியின் போது வன்முறைகள் இடம்பெற சாத்தியங்கள் இருப்பதாக காவற்துறையினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.