பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013

 பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால் சசி பெருமாளின்
உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் இன்று மாலை அவரின் உண்ணாவிரத இடத்திற்கு காவலர்கள், உண்ணாவிரத்தை கைவிடுமாறு கேட்டனர். அதற்கு சசிபெருமாள் மறுத்துவிட்டார். இதனால் போலீசார் சசிபெருமாளை, வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர். அங்கு அவருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.